• Send a Query
  • Talk to us : (India) + 91-9740039859
  • (Canada) + 1-6474300634

எமது குழுமம்


Word Par சரியான தேர்வினை வலியுறுத்துகின்றது. ஒவ்வொரு வேலையும் கனவமாக மதிப்பிடப்பட்டுப் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அந்த வேலைக்கு மிகப் பொருத்தமான மொழியியல் வல்லுநர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். உறுதியான மற்றும் பிழையற்ற தேர்வு என்பது தரக் கட்டுப்பாட்டின் முதல் படி ஆகும்.

எங்களது மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்ப்பின் பல்வேறு புலங்களில் நிபுணத்துவம் பெற்ற தகுதிபெற்ற மற்றும் நிபுணத்துவம் மிக்க மொழியியல் வல்லுநர்கள் ஆவர். அது ஒரு எளிமையான பயண ஆவணமாகவோ அல்லது சிக்கலான பயிற்சிக் கையேடுகளாகவோ அல்லது முக்கியமான சட்ட ஆவணங்களாகவோ, எதுவாகினும்! Word Par மிகப் பொருத்தமான மொழிபெயர்ப்பாளரிடம் பணியை ஒப்படைத்து துல்லியமான மொழிபெயர்ப்புகளை வழங்குகிறது. எங்களது மொழிபெயர்ப்பாளர்கள் குறிப்பிட்ட துறைகளில் மேலதிக நிபுணத்துவம் பெற்றுள்ளனர். சட்ட மொழிபெயர்ப்புகளை மேற்கொள்ளும் ஒரு மொழிபெயர்ப்பாளர் மருத்துவ அல்லது மருந்தாக்கத் தொழில் ஆவணங்களை மொழிபெயர்க்க மாட்டார். இதேபோல், இலக்கிய மொழிபெயர்ப்பு வேறு அணியினரால் மேற்கொள்ளப்படும்.

எங்களது பொருள் விளக்குநர்கள் உடனிகழ்கிற, தொடர்ச்சியான மற்றும் தொலைபேசி பொருள் விளக்கத்தில் பயிற்சிபெற்ற மொழியியல் வல்லுநர்களாவர். பொருள் விளக்குநர்கள் தகுதியுடையவர்கள், பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அவர்களது திறன்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாறுவதில் உள்ள விரைவு மற்றும் தகவல் தொடர்புகளை எளிதாக்க பொருத்தமான பதிவுகளைப் பயன்படுத்துதல் ஆகியவை எங்களது அணியின் தனித்தன்மைகளாகும்.

வணிக விளம்பரங்கள், பயிற்சிக் கையேடுகள், ஆடியோ புத்தகங்கள் போன்றவைகளுக்கான வாய்ஸ்ஓவர்கள் எங்களது குரல் கலைஞர்களால் தொழில்முறைக் குரல்களுடனும் ஸ்டூடியோ உபகரணங்களுடனும் வழங்கப்படுகின்றன. தரத்திலும் காலந்தவறாமையிலும் அதிகக் கவனம் செலுத்தி, கோப்புகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. பதிவு செய்தலுக்கு நவீனத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது, மேலும் பல்வேறு குரல் வகைகளிலிருந்து வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க முடியும்.

எங்களது வசன நிபுணர்கள் உங்களது ரசிகர்களுக்கான துல்லியமாக மொழிபெயர்க்கப்பட்ட மற்றும் குறித்த நேர வசனங்களை முடித்து வழங்குவதற்கான ஆர்வத்தைக் கொண்டுள்ளனர்! துல்லியமான மொழிபெயர்ப்பு மற்றும் காலக்கிரமப்படுத்தலுக்காக மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களின் ஒரு பெரிய அணியை நாங்கள் கொண்டுள்ளோம்.