• Send a Query
  • Talk to us : (India) + 91-9740039859
  • (Canada) + 1-6474300634

இண்டர்ப்ரெடேஷன் சேவைகள்


உங்களது கூட்டங்கள், பயிற்சிகள் மற்றும் கலந்தாய்வுக் கூட்டங்களுக்கான இண்டர்ப்ரெடேஷன் சேவைகள் நன்கு பயிற்சி பெற்ற இருமொழி மற்றும் பன்மொழி பொருள் விளக்குநர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. பின்வருபவைகளுக்கும் சேவைகளும் கிடைக்கின்றன

  1. வணிகக் கூட்டங்கள் மற்றும் பார்வையிடலின் போது தொடர்ச்சியான பொருள் விளக்கம்
  2. மாநாடுகள் அல்லது விழாக்களில் உடனிகழ் பொருள் விளக்கம்
  3. முறையான பயிற்சிகள், காட்சியளிப்புகள் மற்றும் பகுதி-மாநாட்டுச் சூழ்நிலைகளின்போதான பொருள் விளக்க உதவி
  4. டெலிகான்ஃபரன்சிங், இணையவழிக் கூட்டங்கள் மற்றும் தொலைபேசித் தொடர்புகள் ஆகியவற்றின் மூலமான நீண்ட & தொலைதூரப் பொருள் விளக்கம்.

வேண்டுகோளின் பேரில் உடனிகழ் பொருள் விளக்கம் மற்றும் டெலிகான்ஃபரன்சிங்-குக்கு நவீன உபகரணங்கள் கிடைக்கின்றன.

Word Par International, மாநாடுகள் மற்றும் பயிற்சித் திட்டங்களுக்கான பன்மொழி உதவியை நாடக்கூடிய நிறுவனங்களுக்கு சிறப்புவாய்ந்த மாநாட்டுப் பொருள்விளக்கச் சேவைகளை வழங்குகின்றது. மாநாட்டுப் பொருள்விளக்கச் சேவை என்பது இரண்டு மொழிகளிலும் மிக உயர்ந்த நிலையிலான திறன் தேவைப்படும் சிறப்புமிக்க பொருள்விளக்கத் துறை ஆகும். Word Par International உடன் தொடர்புடைய மாநாட்டுப் பொருள்விளக்க வல்லுநர்கள் தகுதி பெற்றவர்கள், நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் மற்றும் அனுபவமிக்கவர்கள். சிறப்புமிக்க மாநாட்டுப் பொருள்விளக்கச் சேவைகள் தகுதிவாய்ந்த நிகழ்நேர பொருள்விளக்க வல்லுநர்களைப் பணியமர்த்துவதன் மூலம் மட்டுமே வழங்கப்படுகின்றன, மேலும் இந்தச் சேவைக்கு மைக்ரோஃபோன்கள், ஹெட்செட்கள், மல்டி-சேனல் ஆடியோ வசதிகளுக்கான வலையமைப்பு போன்ற சிறப்புமிக்க பொருள்விளக்க உபகரணம் மற்றும் ஒயரிங் ஆகியவை தேவைப்படுகின்றன.