• Send a Query
  • Talk to us : (India) + 91-9740039859
  • (Canada) + 1-6474300634

எங்களைப் பற்றி


Word Par உலகளாவிய மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழியியல் வல்லுநர்களின் வலையமைப்பின் உதவியுடன் தொழில்முறை மொழிச் சேவைகளை வழங்குகிறது. அனைத்து மொழி நிபுணர்களும் அந்தந்த இலக்கு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாவர்.

மற்றவற்றுடன் சேர்த்து மொழிபெயர்ப்பு, இண்டர்ப்ரெடேஷன், வாய்ஸ்ஓவர், வசனவரி எழுதுதல் (சப்டைட்லிங்) மற்றும் டிரான்ஸ்கிரிப்ஷன் போன்ற சேவைகளையும் வழங்குகிறோம். எமது சேவைகள் கலைச்சொற்களின் உன்னிப்பான கவனிப்பு மற்றும் கூடுதல் கவனம், சேவைகளின் மொழி மற்றும் அனைத்துத் தொடர்புடைய அம்சங்களின் சரியான தன்மையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

எமது மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்ப்பின் பல்வேறு புலங்களில் நிபுணத்துவம் பெற்ற தகுதிபெற்ற மற்றும் நிபுணத்துவம் மிக்க மொழியியல் வல்லுநர்கள் ஆவர். அது ஒரு எளிமையான பயண ஆவணமாகவோ அல்லது சிக்கலான பயிற்சிக் கையேடுகளாகவோ அல்லது முக்கியமான சட்ட ஆவணங்களாகவோ, எதுவாகினும்! Word Par மிகப் பொருத்தமான மொழிபெயர்ப்பாளரிடம் பணியை ஒப்படைத்து துல்லியமான மொழிபெயர்ப்புகளை வழங்குகிறது.

எமது பொருள் விளக்குநர்கள் உடனிகழ்கிற, தொடர்ச்சியான மற்றும் தொலைபேசி பொருள் விளக்கத்தில் பயிற்சிபெற்ற மொழியியல் வல்லுநர்களாவர்.

எமது வாய்ஸ்ஓவர் கலைஞர்கள் உங்களுடைய பல்வேறு தேவைகளுக்குப் பொருத்தமான, இத்துறையில் மிகச் சிறந்த குரல்களைப் பெற்றுள்ளனர். ஒரு ஆடியோ புத்தகத்துக்கான அல்லது பயிற்சிக் கட்டகத்துக்கான, மற்றும் விளம்பரம் அல்லது ஒரு காட்சியளிப்புக்கான குரல் போன்ற அனைத்து நோக்கத்துக்காகவும்! எந்தத் தருணத்துக்கும் எந்த நோக்கத்துக்கும் தேவையான எந்தக் குரலும் எங்களிடம் உள்ளது.

எமது வசன நிபுணர்கள் உங்களது பார்வையாளர்களுக்கான துல்லியமாக மொழிபெயர்க்கப்பட்ட மற்றும் குறித்த நேர வசனங்களை முடித்து வழங்குவதற்கான ஆர்வத்தைக் கொண்டுள்ளனர்!

உலகம் முழுவதிலும் நாங்கள் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளோம், அவற்றில் மென்பொருள் நிறுவனங்கள், உயிரிதொழில்நுட்ப நிறுவனங்கள், சட்ட நிறுவனங்கள், கணக்கியல் நிறுவனங்கள் மற்றும் பெரிய உற்பத்தி அலகுகளாகவும் உள்ள பெரிய வணிக நிறுவனங்கள் ஆகியன உள்ளடங்கியுள்ளன.

Word Par International பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் தொழில்முறை மொழிபெயர்ப்பு சேவை நிறுவனமாகும். இதன் கிளை அலுவலகங்கள் புது தில்லி (இந்தியா) மற்றும் மிஸ்ஸிஸாகா (கனடா) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இந்நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு தொழில்முறை மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்குகின்றது. மொழிபெயர்ப்பு சேவைகள் உலகம் முழுவதும் உள்ள மொழிபெயர்ப்பாளர்களின் பரந்த கூட்டமைப்பிலிருக்கும் நிபுணத்துவமிக்க மற்றும் தகுதி வாய்ந்த மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து பெறப்படுகின்றன.